Friday, September 19, 2008

புரட்டாசி-1: சுசீலா, ஜானகி சேர்ந்து பாடும் சுப்ரபாதம்!

என்னாங்க, நலமா இருக்கீயளா? கொஞ்ச நாளாக் காணாமப் போயிருந்த கேஆரெஸ் தான் பேசுதேன்! நானா பேசுலே! புரட்டாசி பேசுது! :)

அன்பர்களே,
சுப்ரபாதப் பதிவுகள் நிறைவடைந்த போது, அதனை ஒரு மின்-புத்தகமாக (E-Book) வடிவில் கேட்டிருந்தனர்!
அதான் அதையும் தந்து, இசையும் தந்து, இவ்வாண்டு புரட்டாசிப் பதிவுகள் துவக்கம்! ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு பதிவு!

கீழே பாருங்க...
சுசீலாம்மா, ஜானகி சேர்ந்து பாடும் சுப்ரபாதம்!
முதல் சில பத்திகள் தான்! பந்தம் என்னும் தெலுங்குப் படத்தில் இருந்து! ஷோபன் பாபு-ராதிகா நடித்தது!

அதில் சுப்ரபாதத்தை சுசீலாம்மா, தேன் குரல் எடுத்து ஒலிக்க, ஜானகி குழந்தைக் குரலில் கீச்சிடுகிறார்கள். பின்னால் ஒரே ஒரு தம்பூரா இழை தான்!
சுசீலாம்மாவின் குரலில் ஒரு கூர்மையும், செவ்விய மந்திர உச்சாடனமும் ஒலிக்குது!
ஜானகியின் குரலில் அது எப்படித் தான் அந்தக் குழந்தைத்தனமோ! நீங்களே கேளுங்கள்!



சுப்ரபாத மின் புத்தகம் இதோ... தரவிறக்கிச் சேமித்துக் கொள்ளலாம்!
Venkateswara Suprabatham - Lecture Series in Tamil


சுப்ரபாதப் பதிவுகள் முடிந்து விட்டாலும்.....சுப்ரபாத ஸ்லோகங்கள் இன்னும் முடியவில்லை!
1. சுப்ரபாதத்தைத் தொடர்ந்து...
2. கமலா குச சூசுக குங்குமதோ ன்னு தொடங்கும் பாடல் = தோத்திரம்!
3. ஸ்ரீ வேங்கடேச சரணம், சரணம் ப்ரபத்யே ன்னு முடியும் பாடல் = ப்ரபத்தி!
4. வேங்கடேசாய மங்களம்-னு ஒவ்வொரு வரியும் முடியும் பாடல் = மங்களம்!

இவையும் பாடி முடித்த பின்னர் தான், கோயிலில் தரிசனம் துவங்கும்! எம்.எஸ் அம்மாவும் இந்த நான்கு பாகங்களையும் பாடுவார்!
மெளலி அண்ணா, குமரன் போன்ற பதிவுலக இமயங்கள், மற்ற பகுதிகளின் பொருளையும் அடியேன் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று அப்போதே கட்டளை இட்டு இருந்தார்கள்!

அதான்...இதோ...இன்னும் சில மணியில்...துவங்கி விடுகிறேன்! கமலா குச சூசுக குங்குமதோ!

7 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

என்னங்க இது இமயம், குமரின்னுக்கிட்டு.... மிச்சத்தையும் எழுதுங்கள், படிக்க, ரசிக்க காத்திருக்கிறேன்.

இந்த ஸ்லோகங்களும் முடிந்தால் தான், இந்த வலைப்பூ பூர்த்தி ஆகும். :-)

பிறகு இவற்றையும் சேர்த்தும் மலராக மீண்டும் வெளியிட வேண்டுகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
என்னங்க இது இமயம், குமரின்னுக்கிட்டு.... மிச்சத்தையும் எழுதுங்கள், படிக்க, ரசிக்க காத்திருக்கிறேன்//

நன்றி-ண்ணா!

//இந்த ஸ்லோகங்களும் முடிந்தால் தான், இந்த வலைப்பூ பூர்த்தி ஆகும். :-)//

தங்கள் ஆக்ஞை!

//பிறகு இவற்றையும் சேர்த்தும் மலராக மீண்டும் வெளியிட வேண்டுகிறேன்//

அப்படியே செய்து விட, எம்பெருமான் அருளும், உங்கள் ஆதரவும் தேவை!
வடமொழி மொழியாக்கத்தைச் சரி பார்த்தும் சொல்லுங்க! :)

குமரன் (Kumaran) said...

குமரனுக்குப் பொருத்தமா குமரின்னு சொன்னாலாவது பரவாயில்லை. இப்படி இமயம் அது இதுன்னா சரி ஐஸ் தான் வைக்கிறாருன்னு நினைக்கவேண்டியிருக்கு. ரொம்ப குளிரவும் செய்யுது. :-)

தொடர்ந்து எழுத முன்வந்ததற்கு நன்றி இரவிசங்கர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
குமரனுக்குப் பொருத்தமா குமரின்னு சொன்னாலாவது பரவாயில்லை//

நீங்க ராகவனுக்கு ராகவி-ன்னு சொன்னீங்களே! அது போலவா? :))

//இப்படி இமயம் அது இதுன்னா சரி ஐஸ் தான் வைக்கிறாருன்னு நினைக்கவேண்டியிருக்கு//

அட இமயமலை மேல ஐஸ் இருக்கத் தான் செய்யும்! குளிரத் தான் செய்யும்! பதிவுலக இமயம் ஆவறத்துக்கு முன்னாடி இதெல்லாம் யோசிச்சி இருக்கணும்!

//தொடர்ந்து எழுத முன்வந்ததற்கு நன்றி இரவிசங்கர்//

தங்கள் சித்தம் குமரன்! :)

ஷைலஜா said...

நலம் தானா நலம்தானா? உடம்பு சரி இல்லைன்னு கேள்விப்பட்டேன்...இப்போ சரியாச்சா? மதுரை(யம்பதி) சொல்வதையே திருவரங்க(ப்ரியாவின் மன)மும் சொல்கிறது என்ன இது இமயம் சரி அதென்ன குமரி(:)) ன்னுட்டு?:0 எல்லாம் சேர்த்து மலராக்கித்தர வேண்டுகிறேன்.

SurveySan said...

மெய்யாலுமே அது ஜானகி தானா?


தீர விசாரிச்சுட்டு சொல்லவும் ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SurveySan said...
மெய்யாலுமே அது ஜானகி தானா?//

சர்வேசனுக்கா இந்தச் சந்தேகம்? ஐயகோ! :)

//தீர விசாரிச்சுட்டு சொல்லவும் ;)//

http://psusheela.org/tel/list_tel.php?offset=570&ord=movie&cos=

591
kousalya supraja
bandham
chakravarthy
P. Susheela, S. Janaki
radhika, shalini

சுப்ரபாதம் (தமிழில்):

ஒலிச் சுட்டிகள்!

முழுப் பாடலையும், செவி குளிரக் கேட்பதற்குச் சுட்டிகள் இங்கே:
1. M.S.சுப்புலக்ஷ்மி அம்மா பாடியது (MusicIndiaOnline)
2. கோவில் அர்ச்சகர்கள் ஓதுவது (Real Player)
3. தமிழ் சுப்ரபாதம் - நித்ய ஸ்ரீ பாடுவது (Windows Media Player)

நன்றி:
Music: musicindiaonline.com, sribalaji.com
Pics: tirumala-tirupati.com

சுப்ரபாதம் (மூலம்):

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP