முதல் வணக்கம்!
இன்று கார்த்திகை முதல் நாள். (Nov 17, 2006)
இதோ "ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம்".
நம் எல்லாருடைய இல்லங்களிலும் ஒலிக்கும் பாடல்.
விடியற்காலையில் (அல்லது நாம் லேட்டாக எழுந்த பின்னர் :-) )
இதை ஒலிப் பேழையில் போட்டு நம்மில் எத்தனை பேர், எத்தனை முறை கேட்டிருக்கிறோம்!
எம்.எஸ் மற்றும் வேறு பல இசைவாணர்கள் பாடியதோ, இல்லை கோவில் அர்ச்சகர்கள் முழங்குவதோ,
எதுவாயினும் சரி; கேட்கும் போதே நம்மைச் சுண்டி இழுப்பது இது.
மிகவும் பல பயனுள்ள தகவல்களை இந்தத் தோத்திரம் உள்ளடக்கி உள்ளது. எனவே வரிகளுக்குப் பொருள் தெரிந்து கேட்பதோடு மட்டும் இல்லாமல், ஆழ்வார் பாசுரங்களோடு பொருத்திப் பார்க்கும் போது, அதன் சுகமே தனி!
எம்பெருமான் சுப்ரபாதத்துக்குப் பொருள் உரைக்கலாம் என்பது எண்ணம்.
வழக்கம் போல, உங்கள் ஆதரவும், அன்பும் அளிக்க வேண்டுகிறேன்!
விநாயகர் மற்றும் சேனை முதலியார் (விஷ்வக்சேனர்) இவர்களைப் பணிந்து, துவங்குகிறேன்.
18 comments:
சுப்ரபாத சேவைக்கு குளித்து முதலாக வந்தாச்சு.. நாம் அறிந்த இடம் ஆனால் அறியாத விஷயங்களை தொகுத்து அருமையாகச் சொல்கிறிர்கள்.பகவத் சேவைக்கு லேட்டா வரலாமா?
சேனை முதலியார் முகத்தில்தான் முழிச்சேன். ( கணினி திறந்ததும்)
கார்த்திகை மாசம்கூட மொதல்லெ எனக்குத்தான்:-)))))
திருப்பதியிலே சுப்ரபாதம் பாடற சமயம்தான் அநேகமா நம்ம வீட்டுலேயும்:-)
சுப்ரபாத விளக்கமா? ரொம்ப சந்தோஷம். கரும்பு தின்னக்கூலி கேப்பமா?
நாங்க ரெடி.
துளசி சொன்ன மாதிரி கரும்பு தின்னக் கூலியா? ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஆரம்பமே சிறப்பாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் .
//தி. ரா. ச.(T.R.C.) said...
சுப்ரபாத சேவைக்கு குளித்து முதலாக வந்தாச்சு..
//
வாங்க திராச ஐயா.
பாத்தீங்களா; இங்கும் நீங்களே முதல் பின்னூட்டம்! மிக மிக நன்றி!
மற்ற இரு பதிவுகளும் பாத்தீங்களா? சுப்ரபாதம் என்றால் என்னன்னு சொல்லி, அதன் பின் 1-2 சுலோகங்களுக்குப் பொருள் சொல்லியுள்ளேன்; ஆனால் தமிழ்மணம் ஒரு பதிவைத் தான் முகப்பில் காட்டுது!
தனி வலைப்பூ என்றால் இது போன்ற விடயங்கள் "இலவசம்" போல:-)
யஸ்ய த்விரத வக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம்
விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஷேனம் தமாஸ்ரயே!
ஓம்
யக்ஞோத்பவாய வித்மஹே
த்விதந்தாய தீமஹி
தந்நோ விக்ன: ப்ரசோதயாத்
கார்த்திகை மாதபிறப்பு! கனிந்த நல் சுப்ரபாதம்! கண்ணபிரானின் கருணையே கருணை!
ஷைலஜா
சுப்ரபாதத்துடன் அருமையான காலைப் பொழுது.
மிக்க நன்றி.
சீக்கிரம் ஆரம்பியுங்கள்!!!
காத்திருக்கிறேன்...
ரவி,
நல்ல முயற்சி. கலக்குங்க....
படிக்க தயார்.
//துளசி கோபால் said...
சேனை முதலியார் முகத்தில்தான் முழிச்சேன். ( கணினி திறந்ததும்)
கார்த்திகை மாசம்கூட மொதல்லெ எனக்குத்தான்:-)))))//
வாங்க டீச்சர்!
எப்பமே நீங்க தானே முதல்ல!
துளசி சார்த்திய பின் தானே மத்த பூமாலை எல்லாம்!
//திருப்பதியிலே சுப்ரபாதம் பாடற சமயம்தான் அநேகமா நம்ம வீட்டுலேயும்:-)
//
அப்படின்னா லைவ் ரிலேன்னு சொல்லுங்க!!:-)
//ஜெயஸ்ரீ said...
துளசி சொன்ன மாதிரி கரும்பு தின்னக் கூலியா? ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஆரம்பமே சிறப்பாக இருக்கிறது.//
ஜெயஸ்ரீ வாங்க!
நீங்க வந்தது எனக்கு மகிழ்ச்சி; சுலோகங்களின் பொருள் சொல்லும் போது தங்கள் வருகை, மிகவும் உதவிகரமானது!
//குமரன் (Kumaran) said...
யஸ்ய த்விரத வக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம்
விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஷேனம் தமாஸ்ரயே!
ஓம்
யக்ஞோத்பவாய வித்மஹே
த்விதந்தாய தீமஹி
தந்நோ விக்ன: ப்ரசோதயாத்
//
வாங்க குமரன்!
என் போன்ற ஞான சூன்யங்களுக்குப் புரியம்படியா தமிழ்ல விளக்கிச் சொன்னீங்கனா, உங்க பேரைச் சொல்லிப் புண்ணியம் தேடிப்போம்!
அப்பறம் "குமரனின் பின்னூட்ட விதி" வேற இந்த சமயம் பாத்து ஞாபகம் வருது :-)))
//குமரன் (Kumaran) said...
யஸ்ய த்விரத வக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம்
விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஷேனம் தமாஸ்ரயே!//
அன்பர்களே,
மேலே குமரன் சொன்னது விஷ்வக்சேனர் (சேனை முதலியாரின்) துதிப்பாடல்!
எப்படி விநாயகப் பெருமான் சிவகணங்களுக்கு நாயகரோ (கண+பதி), அதே போல் பெருமாளின் படைக் கணங்களுக்கு இந்த சேனை முதலியார் அதிபதி!
வைணவ மரபில், விநாயகரைப் போலவே, விஷ்வக்சேனரையும் முதலில் வணங்குவது மரபு!
// ஷைலஜா said...
கார்த்திகை மாதபிறப்பு! கனிந்த நல் சுப்ரபாதம்! கண்ணபிரானின் கருணையே கருணை!
ஷைலஜா//
வாங்க ஷைலஜா!
தமிழ்மணத்தில் அவர்கள் பின்னூட்ட மட்டுறுத்தல் இன்னும் இப்பதிவுக்குச் செய்யவில்லை; மற்ற இரு பதிவுகளும் போட்டு விட்டேன்; பாத்து விட்டுச் சொல்லுங்கள்! நன்றிங்க ஷைலஜா!!
//நாமக்கல் சிபி @15516963 said...
சுப்ரபாதத்துடன் அருமையான காலைப் பொழுது.
மிக்க நன்றி. //
நாமக்கல்லாரே வாங்க!
பித்தானந்த சுவாமிகளே வரவேண்டும்!!
இதோ சுவாமிகளுக்கு பூர்ண கும்பம் :-))
//வெட்டிப்பயல் said...
சீக்கிரம் ஆரம்பியுங்கள்!!!
காத்திருக்கிறேன்...//
பாலாஜி,
ஆரம்பிச்சாச்சு!
பாருங்க மத்த இரு பதிவுகளை!
//நாகை சிவா said...
ரவி,
நல்ல முயற்சி. கலக்குங்க....
படிக்க தயார்.//
சிவா வாங்க!
அவசியம் படிங்க, படிச்சு தங்கள் ஐயங்களை, கருத்துக்களை, ஆழ்பொருளை எல்லாம் சொல்லுங்க!!
யஸ்ய த்விரதவக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம்
விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஷேனம் தமாஸ்ரயே
இரு தந்தங்களையுடைய விக்னேசர் (இவர் பிள்ளையார் இல்லை. வைகுண்டத்தில் இருக்கும் நித்யர்களில் ஒருவர்; விஷ்ணுகணங்களில் ஒருவர். யானை முகம் கொண்டவர்) முதலிய நித்யர்கள் சூழ்ந்திருக்கும் அவையினை உடைய விஷ்வக்ஷேனரை தடைகள் நீங்கும் பொருட்டு எப்போதும் வணங்குகிறேன்.
யக்ஞோத்பவாய வித்மஹே
த்விதந்தாய தீமஹி
தந்நோ விக்ன: ப்ரசோதயாத்
வேள்வியில் தோன்றுபவரை அறிகிறேன்
இரு தந்தங்கள் உடையவரை தியானிக்கிறேன்
அந்த விக்னேசரே என் அறிவைத் தூண்டி நடத்தட்டும்
Post a Comment